நேரடி உறுப்பினர்களை குறைக்க சீனா திட்டம்

ஹொங்கொங் சட்டமன்றத்துக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான இடங்களை சீனா, 35 இலிருந்து 20 ஆகக் குறைக்கக்கூடும்.

எதிர்த்தரப்பினர் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையோடு வீட்டோ எனும் இரத்து அதிகாரம் பெறும் சாத்தியம் அதன் மூலம் தவிர்க்கப்படும் என்று ‘சௌத் சைனா மொர்னிங் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்டதாக சட்ட மன்றத்தை விரிவுபடுத்துவதில் இடங்களுக்கான விகிதம் குறித்து, அடுத்த மூன்று நாட்களுக்கு சீன உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ஹொங்கொங் தேர்தல் சீர்திருத்த நடைமுறைக்குச் சீன பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.

ஹொங்கொங் சட்டமன்றத்தில் தற்போதுள்ள இடங்கள் 70. அவற்றில் பாதி இடங்கள் ஐந்து வட்டாரங்களைச் சேர்ந்த தொகுதிகள் மூலம் நிரப்பப்படும்.

ஹொங்கொங் தேர்தல் நடைமுறையில் உள்ள சிறப்புக் குழுக்கள் அல்லது நிபுணர்கள் மூலம் 29 இடங்கள் நிரப்பப்படும். அவை 20 ஆகக் குறைக்கப்பட்டால், 22 வீத இடங்கள் தொகுதிகள் மூலம் நிரப்பப்படும்.

அவ்வாறு நேர்ந்தால், 1991 ஆம் ஆண்டு ஹொங்கொங் முதன்முறை தேர்தல் நடத்தத் ஆரம்பித்ததிலிருந்து அதுவே மிகக் குறைவான விகிதம் ஆகும்.

Mon, 03/15/2021 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை