யாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலமைப்பரிசில்

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் எண்ணக்கருவிற்கமைவாக மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் முகமாக புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது.

இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையம் மற்றும் யாழ்.பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகமும் இணைந்து கல்விக்கு முன்னுரிமை வழங்கும் யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையில் நடைபெற்றது.

இதன்போது கல்விக்கு முன்னுரிமை வழங்கும் நாவற்குழி பிரதேசத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதத்திற்குமான 'ஜப்பானிய வளர்ப்புத் தாய் தந்தையரின் புலமைப்பரிசில்' வழங்குதல் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையின் பிரதான சங்கநாயக்க, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் செயலாளர் கஹதன்னே சந்திரசிறி தேரர் உட்பட பௌத்த துறவிகளும், படைத்தளபதி – 523வது தரைப் படைப்பிரிவு, கட்டளைத் அதிகாரி – 12வது கெமுனு ஹேவா படையணி, சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கரவெட்டி தினகரன் நிருபர்

Mon, 03/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை