கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமல்ல

ஜனாதிபதி, பிரதமரிடம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியாருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட   தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்று நிருபத்தை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண சுகாதார பணிப்பாளர், பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உரிய அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று இந்த விடயத்தை ஆராய்ந்து வருகிறது. இக்குழு, மாகாண மட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடங்களை அடையாளம் காணவுள்ளது. இடங்கள் அடையாளங்காணப்பட்ட பின்னர் அந்த தகவல்கள் எனக்கு அனுப்பப்படும். இந்த இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே, சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொருத்தமான இடமாக இரணைத்தீவு உள்ளமையால் மாத்திரமே இந்த இடத்தை தெரிவுசெய்துள்ளோம் என்றார்.

 

Thu, 03/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை