ஒப்பந்தம் தொடர்பாக சட்ட மாஅதிபர் ஆராய்வு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தை இந்தியா மற்றும் ஜப்பான் பெயரிடும் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான நகல் உடன்படிக்கை சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி அந்த அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு முனைய அபிவிருத்திக்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பாக ஆராய்ந்துள்ள குழுவின் பரிந்துரைகளே சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி குழுவில் துறைமுக அதிகாரசபையின் அறிக்கையும் மேற்படி நாடுகளினால் பெயரிடப்பட்ட குழுக்களின் அறிக்கையும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அதன்போது துறைமுக அதிகார சபையின் யோசனைகளும் அந்த நிறுவனங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன அதன்போது மேற்கொள்ளப்பட்ட இணக்கம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு குறித்த அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் அது தொடர்பில் கலந்துரையாடி அந்த அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 03/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை