இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பெரும் பேரணி

இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல் நாளை இடம்பெறவிருக்கும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு, கொரோனா தொற்றை கையாண்டது மற்றும் மோசமான பொருளாதார சூழலுக்கு மத்தியில் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி கடந்த 2020 ஜூலை தொடக்கம் இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜெரூசலத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை பின்னேரம் சுமார் 20,000 பேர் பேரணியில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது அண்மைய மாதங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய பேரணியாகவும் இருந்ததாக அது குறிப்பிட்டது.

கொடிகளை அசைத்தவாறு பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் 'நெதன்யாகுவை வீட்டுக்கு செல்லும்படி' கோசம் எழுப்பினர்.

Mon, 03/22/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை