மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

அவிசாவளை பகுதியில் அனர்த்தம்

அவிசாவளை பொலிஸ் பிரிவின் வெரலுபிடிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவிய கடும் மழை காரணமாக சுரங்கத்தினுள் மின் தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுரங்கத்திற்கு சென்றிருந்த இருவர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

சுரங்கத்தினுள் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் தற்போதைய நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

44 மற்றும் 45 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Mon, 03/29/2021 - 06:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை