காத்தான்குடியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல்

காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் எதிர் வரும் 15.03.2021வரை மூடுமாறு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் 02.03.2021செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்தான்குடி நகருக்கான கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்கள், குர்ஆன் மதரசாக்கள், மக்தப்கள், பாலர் பாடசாலைகள், என்பவற்றை 02.03.2021தொடக்கம் 15.03.2021வரை மூடுமாறு கேட்டுக் கொள்வதுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் எழுத்து மூல அனுமதியுடனேயே திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத ஒருவரேனும் காணப்படும் பட்சத்தில் வர்த்தக நிலையத்திலுள்ள அனைவரும் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்துவதுடன் பெறுபேறுகள் கிடைக்கப் பெறும் வரை குறித்த வர்த்தக நிலையம் தற்காலிகமாக மூடப்படும்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Thu, 03/04/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை