அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு வலியுறுத்து

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள அச்சங்களை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் ஏற்படும் பயன்கள், அதன் அபாயங்களை விட அதிகம் என நிறுவனம் குறிப்பிட்டது.

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவோர், அதைப் போட்டுக்கொள்ளுமாறு நிறுவனம் அறிவுறுத்தியது.

அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு இரத்தக்கட்டு ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ளன.

ஐரோப்பிய வட்டார நாடுகளில் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் 30 பேருக்கு, வழக்கத்துக்கு மாறான இரத்தக் கோளாறுகள் இருப்பது தெரியவந்தது. அது குறித்து விசாரணை மேற்கொள்வதாக ஐரோப்பிய மருந்து ஆணையம் குறிப்பிட்டது.

அவுஸ்திரேலியா, இந்தியா, தாய்லந்து ஆகிய நாடுகள், அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு ஆதரவு தந்துள்ளன. இந்தோனேசியா, உலக சுகாதார அமைப்பின் மறுஆய்வு முடிவுகளுக்குக் காத்திருக்கப் போவதாகத் தெரிவித்தது.

Fri, 03/19/2021 - 17:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை