அரசியல் கைதி சுதாகரனின் காணிக்கு என்ன நடந்தது?

மோசடி இடம்பெற்றுள்ளதாக சகோதரி புகார்

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றப்பட்டிருப்பதாக ஆனந்த சுதாகரனின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சி - பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு பகுதியிலுள்ள காணியும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு மோசடியாக மாற்றப்பட்டிருப்பதாக சகோதரி கூறியுள்ளார்.

இது குறித்து சகோதரி கூறுகையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி, போலி கையெழுத்துக்களுடன் காணி உரிமம் மாற்றப்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட தம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாதவர்கள் அவருடைய காணிகளையாவது பாதுகாத்து கொடுங்களென தாயாரும், சகோதரியும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

 

Thu, 03/25/2021 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை