பிரான்ஸில் கொரோனா தொற்று மீண்டும் உச்சம்

பிரான்ஸில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 30,000 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு மூன்றாவது முறையாக நோய்ப்பரவல் ஆரம்பித்திருப்பதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க, அந்நாட்டு மருத்துவமனைக் கட்டமைப்பு சிரமத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிலைமையைச் சமாளிக்க, புதிய முடக்கநிலை அறிவிக்கப்பட வேண்டுமென முன்னணிச் சுகாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளைப் போலவே பிரான்ஸின் தடுப்பூசித் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Thu, 03/18/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை