Header Ads

கொழும்பு, களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் பழுது

திருத்தப்பணிக்கு சீனாவிலிருந்து குழு வருகை

உண்மை நிலையை விளக்கினார் இ.மி.ச.தலைவர்

கடந்த 2019 ஜூலை மாதத்தில் திடீரென பழுதடைந்த களனி திஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்திலுள்ள எரிவாயு ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 110 மெகாவோட் கொண்ட இயந்திரமும், டீசல் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மெகாவோட்ஸ் 55 ஸ்டீம் இயந்திரமும் இயங்க வைப்பதற்காக சீனக் கம்பனியான சீமெக்ஸ் எனும் நிறுவனத்தினர் தற்பொழுது இலங்கை வந்துள்ளனா்.

இவர்கள் அடுத்த 11 நாட்களுக்குள் இயந்திரங்களை திருத்தியமைத்து ஏப்ரல் 04ஆம் திகதி இயக்கவைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனரென இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் நேற்றுத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 2019 ஜூலை மாதத்தில் பழுத்தடைந்த இயந்திரங்களை திருத்த, கேள்வி கோரல் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு மின் சக்தி அமைச்சின் அங்கீகாரத்துடன் ஓ.ஈ.எம் எனும் தேசிய நிறுவனத்துக்கே இயந்திரத்தை திருப்பி வெளிநாட்டுக்கு அனுப்பி திருத்துவதற்கான பொறுப்பை ஒப்படைத்தோம்.

அதற்கமைவாக கப்பல் மூலம் இயந்திரங்கள் துபாய்க்கும் இந்தியாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த கால கொரோனா காரணமாக இந்த இயந்திரங்கள் கடந்த டிசம்பர் மாதம் மீள கொண்டுவரப்பட்டு இணைக்கும்போது மீண்டும் அவை பழுதடைந்துவிட்டன. இதனால் இலங்கை மின்சார சபைக்கு பாரியதொரு நட்டம் ஏற்பட்டிருப்பது உண்மை.

இதற்கு காரணம் 2019, காலப்பகுதியில் இலங்கை மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் கொவிட் 19 பிரச்சினைக்கும் காலதாமதம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கூடிய மழை நீர் கிடைப்பதனால் மின் வெட்டு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை. எனவும் அவா் தெரிவித்தார்.

இதனால் குறிப்பிட்ட இந்திய நிறுவனத்தால் தவறுதலாக திருத்தியமைக்கப்பட்டதாலே இயந்திரங்கள் மீள பழுதடைந்தன. கடந்த கால கொவிட் 19, முடக்கம் போன்ற பிரச்சினையினாலேயே இவ்வியந்திரங்களை இந்தியாவிலிருந்து கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இயந்திரங்கள் மீள பழுதடைந்தமையினால் இலங்கை மின்சார சபைக்கு 650 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டது.

இதனை மீளமைப்பதற்காக பாரமளிக்கப்பட்ட கம்பனிகளுக்கு இதுவரை மின்சார சபை பணம் எதுவும் செலுத்தவில்லை. இது பற்றிய ஒரு விசாரனைக் குழு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் மின்சாரத்துறை நிபுணத்துவம் பெற்ற கலாநிதி லீலானந்த சமரநாயக்க தலைமையில் விசாணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிடப்பட்டநிறுவனங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரித்து வருகின்றது.

இவ் விடயத்தை வைத்து இலங்கை மின்சார சபை முகாமைத்துவம் திருட்டுத்தனமாக பணம் சம்பாதித்தாக சில ஊடகங்கள் அரசியல் ரீதியாக பிரச்சாரம் செய்கின்றன. அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் குமுதினி ஹேரத், உப தலைவர் நளிந்த இளங்கோ ஹேரத் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேட்ப மின்சாரத்தை நாட்டில் சகல மக்களுக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டீசல் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்திங்களை இயக்குவதாலேயே இலங்கையில் எரிபொருளுக்காக நாளாந்தம் 30 கோடி ரூபாவை மின்சார சபை இழந்து வருகின்றது. இதனை எரிவாயு ஊடாக இயக்கும் அல்லது எல்.எம். ஜி மின்சாரத்தை இலங்கை உற்பத்தி செய்தால் மின்சார சபையின் செலவினம் அரைவாசியாகக் குறைந்து விடும்.

அதற்காக ஜனாதிபதி அத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காகவே அமைச்சுக்கு அனுமதி தந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சிக் காலத்தில் நுரைச்சோலையில் அனல் மிண்சாரத்தை ஏற்படுத்தியதாலேயே மின்சாரம் சாதாரண விலைக்கும் பொதுமக்களுக்கு வழங்கமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தெஹிவளை கல்கிஸ்ச விசேட நிருபர்

Thu, 03/25/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.