பின்னவலயில் இலங்கையின் முதலாவது நகர பல்கலைக்கழகம்

இலங்கையின் முதலாவது நகர பல்கலைக்கழகம் கேகாலை ரம்புக்கன பின்னவலயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சௌபாக்கிய நோக்கு திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் இதுவே முதலாவது நகர பல்கலைக்கழகமாகும்.   சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் சப்ரகமுவ மாகாண நிதி ஒதுக்கீட்டில் 1240இலட்சம் ரூபா செலவில் ஹோட்டல் பாடசாலைக்கென அமைக்கப்பட்ட நான்கு மாடி கட்டிடத்தொகுதியை மையமாக கொண்டு இதில் நகர பல்கலைக்கழத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேற்படி கட்டடத் தொகுதியில் கேகாலை நகர பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, கனக ஹேரத் ஆகியோர் அண்மையில்நேரில் சென்று பார்வையிட்டனர்.  கேகாலை நகரில் ஆரம்பிக்கப்படவுள்ள நகர பல்கலைக்கழகத்தின் மூலம் உல்லாசத்துறை, விவசாயத்துறை, மொழிகள், கால்நடை, ஆடை உள்ளிட்ட பல்வேறு துறைகளை இலக்காக கொண்டு பட்டப்படிப்பு பாடநெறியை கற்க முடியும்.  க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.  இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

காவத்தை தினகரன் விசேட நிருபர் 

Tue, 03/30/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை