அயோத்தி ஸ்ரீ இராமர் கோவிலுக்கு பூஜிக்கப்பட்ட புனித சின்னம் வழங்கல்

கோபால் பாக்லே முன்னிலையில் மிலிந்த மொரகொடவிடம் கையளிப்பு

இந்தியாவின் அயோத்தி நகரில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீ ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளுக்காக நுவரெலியாவில் அமைந்துள்ள 'சீதா எலிய' ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட புராதன நினைவுச்சின்னம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளவத்தை அருள்மிகு மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னிலையில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் இது கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா சீதையம்மன் ஆலய நிர்வாக உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கோபியோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான பி.பி. தேவராஜ் ஆகியோர் இணைந்து இந்த புனித சின்னத்தை கையளித்தனர்.வர்த்தகப் பிரமுகர் பி. முத்துகிருஷ்ணன், மயூராபதி அம்மன் ஆலய அறக்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Fri, 03/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை