இம்ரான் கானுக்கு நெருக்கடி

பாகிஸ்தான் செனட் தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் கட்சி முக்கிய ஆசனம் ஒன்றை தோற்றிருக்கும் நிலையில் அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 96 ஆசனங்கள் கொண்ட மேலவையில் 48 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் நாட்டின் மாகாண சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதில் இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சியின் தற்போதைய நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ் செய்க் தோல்வி அடைந்திருப்பதாக உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி 169–164 என்ற வாக்குகளால் செய்க்கை தோற்கடித்துள்ளார். இந்தத் தோல்வி ஆளும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஷாங் மஹ்மூத் குறைசி தெரிவித்துள்ளார்

Fri, 03/05/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை