அமைதி போராட்டத்தின் பின் மியன்மாரில் மீண்டும் வீதி ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரில் வர்த்தகங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளில் தங்கி நடத்திய அமைதிப் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்கியுள்ளனர்.

வர்த்தக நகரான யாங்கோன், மத்திய நகரான மொனிவா மற்றும் மேலும் பல சிறு நகரங்கள் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மௌலமினே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்ற பொலிஸார் 20 பேரை கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது இருவர் காயமடைந்துள்ளனர். எனினும் நேற்று பின்னேரம் வரை உயிரிழப்புகள் பற்றி செய்தி வெளியாகவில்லை.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் இதுவரை குறைந்தது 286 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மியன்மார் இராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் இரு கூட்டு நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Fri, 03/26/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை