சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை

பைசர் - பயோஎன்டெக் நிறுவனங்கள் 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளை ஆரம்பித்துள்ளன.

2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவ்வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசிகளைப் போடுவதற்கு அவை திட்டமிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை தொண்டூழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு சோதனைகள் ஆரம்பமாயின. மிக இளம் வயதாக 6 மாதக் குழந்தையும் சோதனையில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகள் போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமே 16, 17 வயதினருக்கு பைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மற்ற நாடுகளில் அதற்கு ஒப்புதல் இல்லை.

மொடர்னா நிறுவனமும் குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசிப் பரிசோதனைகளைச் செய்துவருகிறது.

Sun, 03/28/2021 - 17:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை