ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளுக்கு உதவிய சகலரும் நன்றிக்குரியவர்கள்

கொவிட் 19தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஒத்துழைத்த,கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான போராட்டத்துக்கு ஒத்துழைத்த சகலருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.இந்தப் பணியில் ஈடுபட்ட சகலரையும் ஓட்டமாவடி மக்கள் மிகக் கௌரவமாக உபசரித்தனர்.அதிகாரிகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறந்துவிடாது.மூன்று தினங்கள் இப்பகுதியில் இருந்து இவற்றை  கண்காணித்து வந்ததால் இதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது.

 பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் அல் அமீன் மற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜி ஆகியோரது இரவு பகல் பாராத அர்ப்பணிப்புக் கள் அளப்பரியன.

கடந்த சில நாட்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஒருங்கிணைப்பாளர், சிரேஷ்ட தலைமை தாங்கும் பொது சுகாதார உத்தியாகத்தர்,  மற்றும் அவரது ஊழியர்கள் என அனைவரும் மணிக் கணக்கில், அர்ப்பணிப்புடன் செயற்பட்டதற்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 231ஆவது படைப்பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸ்  நிலையம் ஆகியவற்றை சேர்ந்த எமது இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இரவு பகலாக தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதையும் முறையான வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்வதற்கான உடல்களைக் கையாளுதல் என்பவற்றோடு அவ்விடத்திற்கு தேவையான அனைத்து தளபாடங்கள்  தடையின்றி கிடைப்பதை  உறுதி செய்வதையும்,தான் நேரடியாகக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்குடா தினகரன் நிருபர்

Mon, 03/08/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை