காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி ஆஷா மற்றும்  கோசலாதேவி  ஆகிய இருவரும்  நேற்று  (23)  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து  திருக்கோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் க .செல்வராஜா மற்றும் பட்டிணமும் சூழலும் தொகுதி தலைவர் வே.சுரேஸ்குமார் ஆகியோரால் சிவன் ஆலய குருக்கள் மூலம் இவர்களுக்கு இளநீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர். இதன் போது திருகோணமலை மாவட்ட தலைவி ஆஷா கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம்,

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சம்பந்தன் ஐயா சம்மந்தபட்டவர்களுடன் பேசி தீர்வை பெற்று தருவதாக தமக்கு வாக்குறுதி வழங்கியதையடுத்து, இப் போராட்டத்தை கைவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 03/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை