நாட்டின் அழிவுகள், இன, மத முறுகல்கள்; மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல சில ஊடகங்களும் காரணம்

- இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி

நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான முறுகல்களுக்கு மதத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஒருசில ஊடகங்களுமே காரணமாகுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்தபோது,...

சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவதில் ஊடங்களுக்கு பெரும் பங்குள்ளதுடன், பொறுப்பும் உள்ளது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள், கத்தோலிக்கர்கள் அல்லது முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது சில ஊடகங்கள் செயற்பட்டுள்ள விதம் மோசமானதாகும்.

நான் தினமும் தமிழ் பத்திரிகைகளை பார்ப்பேன். அவை வேறு ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. சிங்களப் பத்திரிகைகள் வேறு ஒரு பார்வையை உருவாக்குகின்றன. பத்திரிகைகளை விற்றுக்கொள்ளவா? வர்த்தக ரீதியான நன்மைகளை பெற்றுக்கொள்ளவா? அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழா? இவ்வாறு செயற்படுகின்றன எனத் தெரியவில்லை. எம் அனைவருக்கும் சமூக பொறுப்புள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். நாட்டை நாசமாக்கும் சிறிய தொகுதியினருக்கு இடமளித்து இரத்த ஆறுகளை ஓடவைக்க கூடாது. எந்த மதத்தை பின்பற்றினாலும் நாம் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏனைய விடயங்களை செய்ய முடியும் என்றார்.

Mon, 03/15/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை