Header Ads

பெக்கோ இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி

கினிகத்தேனையில் சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடை சாய்ந்து, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

பொல்பிட்டிய விகாரைக்கு அருகாமையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடை சாய்ந்து, விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

பதுளை ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த சந்தருவான் மதுசங்க யாப்பா (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இச்சம்பவம் நேற்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பொல்பிட்டிய பகுதியிலுள்ள மின்சார உற்பத்தி நிலைய புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது பெக்கோ இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.  உயிரிழந்த நபரின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் பிரேதச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

நோட்டன் பிரிட்ஜ் நிருபர், ஹற்றன் சுழற்சி நிருபர்

Thu, 03/25/2021 - 10:26


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.