சீன உற்பத்தி கொரோனா தடுப்பூசி இரண்டு வாரங்களில் இலங்கைக்கு

- இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண

சீன உற்பத்தி கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டுக்கு கிடைக்குமென மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.  

மேற்படி தடுப்பூசி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் அன்பளிப்பாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க ஆறு இலட்சம் சீன தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.   அதேவேளை, ஏப்ரல் முதலாம் வாரம் முதல் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 10வார காலங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

கொழும்பு நகரில் இதுவரை 1,06,400 பேருக்கு முதலாவது கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ள தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும் 30 வயது முதல் 59 வயது வரையான நபர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது சுகாதார அமைச்சின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.   (ஸ)     

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 03/29/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை