வெள்ளவத்தை விபத்து; காயங்களுக்கு உள்ளான மற்றும் ஒருவரும் பலி

வெள்ளவத்தை கடலோர வீதியில் பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மற்றொரு நபரும்  உயிரிழந்துள்ளார். 

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை மாவத்தை வீதியில் கார் ஒன்று மோதியதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரே நேற்று முன்தினமிரவு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

காயமடைந்த இருவரும் 57மற்றும் 77வயதுடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இரவு களியாட்ட விடுதியொன்றிலிருந்து காரில் பயணித்துக் கொண்டிருந்த மதுபோதையில் இருந்த இருவர் பயணித்த காரே மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரையும் மூன்று பாதசாரிகளையும் மோதியுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் பெண் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.  காரில் பயணித்த இருவரும் கடுவலை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் 49வயதான காரின் சாரதி வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

நால்வரை மோதிச்சென்றுள்ள மேற்படி காரின் சாரதியை வெள்ளவத்தை பொலிசார் கைது செய்துள்ளனர். காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தி வருகின்றமை தொடர்கிறது. 

கேளிக்கை விடுதிகளில் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு வாகனங்களில் பயணிப்பவர்களால் பாதசாரிகள் உட்பட ஏனையவர்களும் தொடர்ந்து பலியாகி வருவதாக அவர் தெரிவித்தார்.  அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 03/08/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை