இலங்கையில் முதல் கொரோனா நோயாளி இனங்காணப்பட்ட நாள்

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 

இலங்கையில் கடந்த வருடம் மார்ச் 11ஆம் திகதி மத்தேகொட பகுதியை சேர்ந்த சுற்றுலாத்துறை வழிகாட்டியான ஜயந்த ரணசிங்கவே இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளியாக இனங்காணப்பட்டவராவர். 

கடந்த வருடம் மார்ச் 04ஆம் திகதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட போதும் மார்ச் 13ஆம் திகதியே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 351 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதற்கிணங்க இதுவரை நாட்டில் குணமடைந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

 

Fri, 03/12/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை