நியூசிலாந்தில் வலுவான மூன்று பூகம்பங்கள் பதிவு

நியூசிலாந்தில் பிராந்தியத்தை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் உட்பட நேற்று மூன்று பூகம்பங்கள் பதிவானதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அது கைவிடப்பட்டது.

வடக்கு தீவின் கடற்கரை பகுதியில் மூன்றாவது பூகம்பம் 8.1 ரிச்டர் அளவில் பதிவானதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

மக்கள் உயர்வான இடத்தை நோக்கி செல்ல முயன்றதில் வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. முதல் பூகம்பம் தாக்கிய 13 மணி நேரத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

நேற்று மதியம் சில அலைகள் கடற்கரையை தாக்கியபோதும், இதன் பெரும் அலை கடந்து விட்டது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மக்களுக்கு வீடுகளுக்கு திரம்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டபோதும் கடற்கரையில் இருந்து விலகி இருக்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென் பசிபிக் தீவுக் கூட்டங்களான நியு கலடோனியா மற்றும் வனுவாட்டாவிலும் ஆபத்தான அலைகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவின் பெரு, ஈக்வடோர் மற்றும் சிலி போன்ற நாடுகளின் கடற்கரைகளில் 3 மீற்றர் அளவு உயரத்திற்கு அலை தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Sat, 03/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை