மனு விசாரணையிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 20 நாட்கள் கொண்ட சிசுவின் பெற்றோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகியுள்ளார். குழந்தையை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்த குறித்த மனு மீதான விசாரணைக்காக ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விசாரணையில் இருந்து விலகுவதாக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து மனுமீதான பரிசீலனைகள் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பு 15 ஐ சேர்ந்த சாயிக் எனும் சிசு கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தது. இதற்கு கொரோனா தொற்றியதாக அடையாளங் காணப்பட்ட நிலையில் பெற்றோரின் அனுமதி இன்றி கட்டாயப்படுத்தி குழந்தை எரிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

Tue, 03/30/2021 - 06:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை