அமைதி எதிர்பார்ப்பை இழந்தது பலஸ்தீனம்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதி முன்னெடுப்புக்கான​ எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று பலஸ்தீன பிரதமர் முஹமது சதய்யே தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலிய தேர்தலில் வெற்றிபெற்ற தரப்புகளின் அரசியல் நோக்கங்கள் அமைதி முன்னெடுப்பில் பலஸ்தீனத்திற்கு எந்த அரசியல் பங்களிப்பும் இருக்காது என்பதையே காட்டுகிறது” என்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் டுபாஸ் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டபோது சதய்யே தெரிவித்தார்.

இந்த முடிவுகளின்படி இஸ்ரேல் அரசியலில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவில் லிகுட் கட்சி அதிகபட்சமாக 30 இடங்களை வென்றுள்ளது. இதன்படி அவரது கூட்டணி 59 இடங்களை வென்று பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான 61 ஆசனங்களை வெல்லத் தவறியுள்ளது. தேர்தலில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியபோதும் அதில் நெதன்யாகு எதிர்ப்பாளர்களும் உள்ளனர்.

“பலஸ்தீன நிலம், நீர் மற்றும் சொத்துகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை” நிறுத்தும்படி சர்வதேச சமூகத்திடம் சதய்யே கேட்டுக்கொண்டார். எந்த ஒரு உண்மையான அமைதி முயற்சிக்கும் பலஸ்தீனம் தாயாராகவே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது, சட்டவிரோத குடியேற்றங்களை நிறுத்துவது மற்றும் 1967 போருக்கு முன்னரான எல்லையை அடிப்படையாகக் கொண்ட இரு நாட்டு தீர்வு ஒன்றை ஏற்க இஸ்ரேல் மறுத்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை 2014 ஏப்ரலில் முறிந்தது.

Fri, 03/26/2021 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை