முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து (திருத்த) சட்டமூலம் உள்ளிட்ட சில சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு ஏற்புடையவாறான கொள்கைப் பத்திரத்தை பரிசீலனை செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அரசியலமைப்பு தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உப செயற்குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவின் தலைவராக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குயுள்ளது.

*குற்றச் செயலொன்றின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பாதுகாப்பளித்தல் சட்டத்திற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பை விதித்தல்

*முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து (திருத்த) சட்டமூலம்

*தண்டனைச் சட்டக்கோவையின் (19 ஆம் அத்தியாயத்தின்) (மனித கௌரவம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாத்தல், போலிச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள்)

*1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு நடைமுறைக் கோவை சட்டத்திற்கான திருத்தம் (மனித கௌரவம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாத்தல், போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பான பேச்சுக்கள்)

ஆகிய சட்டங்களை திருத்தவும் அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (பா)

Wed, 03/03/2021 - 07:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை