உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் 8வது நாளான நேற்று தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

எனினும் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை விசேட நிருபர், ஐ.சிவசாந்தன்

 

Tue, 03/09/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை