கொங்கோ ஜனாதிபதி வேட்பாளர் கொரோனா தொற்றினால் மரணம்

கொங்கோவில் ஜனாதிபதி தேர்தல் தினத்தில் அதன் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் கய் பிரஸ் பெர்பைட் கொலேலாஸ் கொரோனா தொற்றினால் மரணித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கடந்த ஞாயிறன்று பிரான்ஸுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கொலேலாஸ் உயிரிழந்ததாக அவரது பிரசார குழு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கொலேலாஸ் 15வீத வாக்குகளை வென்று இரண்டாவது இடத்தை பிடித்ததோடு அதில் டெனிஸ் சசூ நிகுசோ வெற்றி பெற்றார். கொலேலாஸின் தந்தை பெர்னாட் கொலேலாஸ் 1997இல் நாட்டின் சிவில் யுத்த காலத்தில் சிறிது காலம் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.  

பதவியில் இருக்கும் ஜனாதிபதி நிகுசோ மீது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதோடு அவர் நாட்டை ஒரு பொலிஸ் தேசமாக மாற்றி வருவதாக குற்றம்சாட்டுகின்றன. 36 ஆண்டுகளாக கொங்கோவில் ஆட்சி புரியும் நிகுசோவுக்கு கடும் போட்டியாளராக கொலேலாஸ் பார்க்கப்பட்டார்.   

Tue, 03/23/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை