பாராளுமன்ற நீர்த்தடாகம் சுத்தப்படுத்தப்பட்டதாலேயே தியவன்னாஒய மாசடைந்தது

பாராளுமன்றத்தின் முன்னாலிருக்கும் நீர்த்தடாகம் சுத்தப்படுத்தப்பட்டு அந்த நீர் தியவன்னா ஓயாவில் கலக்கவிடப்பட்டுள்ளதாலேயே தியவன்னா ஓயாவின் ஒருபகுதியில் நீர் மாசடைந்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்துக்கு உள் நுழையும்போது தியவன்னா ஓயாவின் ஒருபகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக நீரின் நிறம் மஞ்சள், பச்சையாக மாறி உள்ளது. இது சுற்றாடலை மாசடையச்செய்திருக்கும் செயலா என்பது தொடர்பாக ஆராய வேண்டும் என்றார்.  

இதற்கு பதிலளித்த சபாநாயகர், பாராளுமன்றத்தின் முன்னால் இருக்கும் நீர்த் தடாகம் சுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த நீர் தியவன்னா ஓயாவுக்குள் சென்றுள்ளதால்தான் நீரில் நிறம் மாற்றமடைந்திருக்கின்றது. அந்த பகுதியை தற்போது சுத்தப்படுத்தவேண்டி இருக்கின்றது என்றார்.  

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்துக்கு நுழையும் இடத்திலே சுற்றாடல் மாசடைவதாக இருந்தால், சிங்கராஜ வனம், ஹோட்டன் சமவெளி தொடர்பில் என்ன பேசுவது? 225மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வரும் வெளியான தியவன்னாவில் இவ்வாறு சுற்றாடல் மாசடைவு இடம்பெறுவதென்றால், இந்த நாட்டின் நிலைமை என்ன? என்றார்.  

இதற்கு பதிலளித்த சபாநாயகர், கவனமில்லாமல் செய்ததனாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. தற்போது செய்வதற்கு வழியில்லை. அதனால் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Thu, 03/25/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை