நம்பிக்கை வக்கெடுப்பில் இம்ரான் கான் வென்றார்

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார்.

பாராளுமன்றக் கீழவையான தேசியப் பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்ததைத் தொடா்ந்து, அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல 172 வாக்குகள் தேவைப்படும் என்ற நிலையில் ஆளும் கட்சி 178 வாக்குகளை வென்றமை குறிப்பிடத்தக்கது. 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் வாக்கெடுப்பை புறக்கணித்தது.

பாராளுமன்ற மேலவையான செனட் சபைக்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற இடைத் தோ்தலில், முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியிடம் இம்ரானின் நிதியமைச்சா் அப்துல் ஹபீஸ் ஷேக் தோல்வியடைந்தார்.

அந்தத் தோல்வியைத் தொடா்ந்து, இம்ரான் பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சி கூட்டணி வலியுறுத்தியது.

அதையடுத்து, தேசியப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி, தற்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Mon, 03/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை