திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தடுப்பூசி பெற்றார்

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்.

85 வயதான அவர், வட இந்தியாவில் உள்ள தர்மசாலா ஊரில் தடுப்பூசியைப் பெற்றார். கடுமையான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்குத் தடுப்பூசி மிகவும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். அனைவரையும் போல் தாமும் மருத்துவமனைக்குச் சென்றே தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அவர் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவருடன் வசிக்கும் 10 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 11 பேருக்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலையும் அஸ்ட்ராசெனக்கா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவின் சீரம் கழகத்தால் தயாரிக்கப்பட்ட கொவிசீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டபோதும் அது சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னிலை ஊழியர்களுக்கே பட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சுகவீனமுற்ற 45 தொடக்கம் 59 வயது கொண்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Mon, 03/08/2021 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை