நெருப்பு குழம்பை கக்கிய இந்தோனேசிய எரிமலை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபுங் எரிமலை மீண்டும் நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் கக்கியுள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து குமுறிக் கொண்டிருக்கும் அந்த எரிமலை இதற்குமுன் இம்மாத ஆரம்பத்தில் வெடித்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நேர்ந்த வெடிப்பில் அது கக்கிய புகையும் சாம்பலும் ஆயிரம் மீற்றர் உயரம் வரை சென்றன.

2,600 மீற்றர் உயரமுள்ள அந்த எரிமலை வட சுமத்ரா மாநிலத்தில் உள்ளது.

அதிலிருந்து வெளியான சாம்பல் தென்கிழக்கே 3 கிலோமீற்றர் வரை பரவியதாக இந்தோனேசிய எரிமலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

எரிமலையில் இருந்து 5 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றுவிடும்படி கிராமவாசிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

வழிந்தோடும் எரிமலைக் குழம்பால் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Sat, 03/13/2021 - 18:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை