Header Ads

நடுவீதியில் கற்பழிப்பு: இருவருக்குத் தூக்கு

பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தைத் தூண்டிய கற்பழிப்புச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று இருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

நடு வீதியில் வைத்து தனது இரு பிள்ளைகள் பார்த்திருக்கும்போது பாகிஸ்தான் பூர்வீகம் கொண்ட பிரான்ஸ் பெண் ஒருவரை கற்பழித்ததாக ஆதில் மல்ஹி மற்றும் ஷப்கத் அலி பக்கா என்ற இருவருமே குற்றங்காணப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் லாஹூருக்கு அருகில் தனது காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில் இந்த இருவரும் காரை உடைத்து அந்தப் பெண்ணை கற்பழித்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பெண் தமாதித்து பயணம் மேற்கொண்டது தொடர்பில் பொலிஸார் கருத்து வெளியிட்ட நிலையில் இதற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லாஹூரின் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த இரு ஆடவர்களும் கும்பலாக கற்பழிப்பில் ஈடுபட்டது, கடத்தல், கொள்ளை மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டது.

Mon, 03/22/2021 - 09:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.