கடவுச்சீட்டு விவகாரம்: ஹொங்கொங்கிற்கு பிரிட்டன் விளக்கம்

வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்தெந்த கடவுச்சீட்டுகளை அங்கீகரிக்க முடியும் என்பதை ஹொங்கொங் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று பிரிட்டன் சாடியுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்கள், பி.என்.ஓ என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டுக் கடவுச்சீட்டை பயண ஆவணமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று ஹொங்கொங் அரசாங்கம் கேட்டுக்கொண்டிருந்தது.

அதற்குப் பதிலாக ஹொங்கொங்கின் கடவுச்சீட்டை பயன்படுத்துமாறு, 14 நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடம் அது தெரிவித்தது.

புதிய விசா திட்டத்தைப் பிரிட்டன் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, ஹொங்கொங் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஹொங்கொங்கை விட்டு வெளியேற விரும்பும் ஹொங்கொங்வாசிகள் பிரிட்டனின் குடியுரிமையைப் பெற அந்தத் திட்டம் வழிவகுக்கும்.

கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால், பிரிட்டனின் புதிய விசா திட்டம் வெளியிடப்பட்டது.

Sun, 03/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை