ஜனநாயக ஆர்வலர்கள் மீது பொலிஸ் குற்றச்சாட்டு பதிவு

ஹொங்கொங் பொலிஸார் ஜனநாயக ஆர்வலர்கள் 47 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

அதிகாரத்தைக் கீழறுக்க முயன்றதாக அவர்கள் மீது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயக ஆர்வலர்கள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

ஹொங்கொங்கில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பொலிஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு நேற்று உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலையில், ஹொங்கொங் சட்டமன்றத்துக்கு, சட்ட விரோதமாய்த் தேர்தல் நடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் போதுமான இடங்களில் வென்று அதன் மூலம் அரசாங்கத்தை முடக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. 

Tue, 03/02/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை