சுத்தமான குடிநீருக்காக போராடும் டிலிகுற்றி தோட்ட மக்கள்

மலையகம் அழகிய இயற்கை சூழலில் ஆறுகள், நீரூற்றுக்கள், நீர்வீழ்ச்சிகள் என நீர்வளம் நிறைந்து காணப்பட்டாலும் இன்னும் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீருக்காக போராடுகின்றனர்.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை டிலிகுற்றி தோட்ட மக்கள் 200வருடங்களாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக போராடிவருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை டிலிகுற்றி தோட்டத்தில் சுமார் 35குடும்பங்களை சேர்ந்த 160ற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனினும்  200வருடங்களாக ஒரு குவளை  சுத்தமான நீரை பெற்றுக்கொள்ள கூட  காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.

இதுதொடர்பில் காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசியல்தலைவர்களுக்கு அறிவித்தும்  இன்னும் தீர்வில் எட்டப்படவில்லை.

ஒவ்வொரு நாளும் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் திண்டாடுகின்றனர்

ஒரு குழாயில் வரும் சொட்டு நீருக்காக குடங்களை  வைத்துக்கொண்டு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டிய அவல நிலை காணப்படுகின்றது. இதனால் தமது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு  அப்பகுதியிலுள்ள  நீர்ஊற்றிலிருந்து பல்வேறு உயிர் ஆபத்துகளுக்கு மத்தியில் நீரை பெற்று வருவது வேதனை தரும் விடயமாகும். முதியோர்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகளிடம் தோட்ட நிர்வாகமும் அறிவித்த போதிலும் இதுவரை ம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Tue, 03/30/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை