“அரச குடும்பத்தில் இனவாதம் இல்லை”

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இனவாதம் இல்லை என்று தமது குடும்பத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார் இளவரசர் வில்லியம்.

இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் மெர்க்கல் ஆகியோர், அரச குடும்பத்தில் இனவாதத்தை எதிர்நோக்கியதாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வில்லியம் இவ்வாறு கூறியுள்ளார்.

தொலைக்காட்சிப் பிரபலம் ஓப்ரா வின்ப்ரியுடனான நேர்காணலில், தங்களது மகன் ஆர்ச்சியின் தோல் நிறம் குறித்து அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் அக்கறை தெரிவித்ததாக ஹரியும் மேகனும் கூறியிருந்தனர்.

அதுபற்றி, ஹரியுடன் இன்னும் பேசவில்லை என்றும் கூடிய விரைவில் பேசவுள்ளதாகவும் இளவரசர் வில்லியம் தெரிவித்தார்.

அந்த விவகாரம், தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சை குறித்து ஹரியின் தந்தையான இளவரசர் சார்ல்ஸ் இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

Sat, 03/13/2021 - 16:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை