ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிகாரிகளுக்கு அபராதம், 06 மாத சிறை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1,000 ரூபா சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, அபராதம் மற்றும் 06 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த (மார்ச்) 05ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வரவு - செலவுத் திட்ட சலுகை கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Fri, 03/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை