எந்தவொரு முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்

- பொதுஜன பெரமுன மாகாண சபைகள் உறுப்பினர்கள் அமைப்பு கோரிக்கை 

எந்தவொரு முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாகாண சபைகள் உறுப்பினர்கள் அமைப்பு கோரியுள்ளது.  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாகாண சபை உறுப்பினர்கள் அமைப்பு பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மாகாண சபை உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர்,  கடந்த அரசாங்கம் மாகாணசபை தேர்தலை ஒத்தி வைத்து அதனை காணாமலாக்கி நான்கு வருடங்களாகின்றன. அனைத்து மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளன. மாகாணசபை முறை

உருவாக்கப்பட்டு 33வருடங்களாகின்றன. இன்று மக்கள் பரிதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குகின்றன. இந்த காலப்பகுதி அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகும் . ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் இத்தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மாகாண சபை தேர்தலை நடத்த இரண்டு முறைகளை பரிந்துரைத்து அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அந்த அமைச்சரவை பத்திரத்தை ஆராய ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதே போன்று பல மாதங்களுக்கு முன்னரும் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அமைச்சரவை பத்திரமொன்றை முன் வைத்திருந்தார். வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்படாமல் முன் கொண்டு செல்லப்பட்டது. எந்த முறை என்றாலும் எமக்கு பிரச்சினையில்லை. இந்த தேர்தலை நடத்துவதற்கு ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்ற ரீதியில் இந் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க தலையிடுமாறு கோருகிறோம்.

Tue, 03/30/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை