குற்றச்செயல்களை தடுக்க பாரிய சுற்றிவளைப்புகள்

- விசேட பொலிஸ் செயலணி உருவாக்கம்

நாடு முழுவதும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் செயலணியொன்று அமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சிறப்பு பணிக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குற்றச்செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் முன் அனுபவம் உள்ளவர்களுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பல்வேறு வகையான குற்றவாளிகள் பல்வேறு இடங்களில் பதுங்கி உள்ளனர். தேடுதலின் போது அவர்கள் தப்பி ஓடுவதற்கு முன்னர் கைது செய்யும் நோக்கிலேயே இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்று வருகிறது. இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கைகள் இரவும் பகலுமென பல நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சுற்றிவளைப்புகள் வெற்றிபெற மக்கள் வழங்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/20/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை