அமெரிக்க புதிய நிர்வாகத்திற்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

வட கொரியா, தனது பக்கத்து நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி குறித்து பியோங்யாங் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வட கொரிய அணுவாயுத முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் புதிய நிர்வாகம் அமைதியை விரும்பினால், தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்ப வேண்டாம் என்று வட கொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் கூறியுள்ளார். இரு கொரியாக்களின் எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உடன்பாட்டை ரத்துசெய்யப் போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். வட கொரியாவைத் தொடர்பு கொள்ள முயன்றதாவும், ஆனால் அங்கிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜென் சாக்கி முன்னர் கூறியிருந்தார்.

Wed, 03/17/2021 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை