கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் ஒரு சிலரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. கடந்த அரசாங்கத்திலிருந்த அனைவருமே பொறுப்புக்கூற வேண்டுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு மீதான அறிக்கை தொடர்பிலான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் குழுவினர் கடந்த ஆட்சியில் இருந்ததவர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி செய்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார்.  அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தினர். இதன்போது பிறந்த குழந்தையொன்றை பார்ப்பதாகவே சென்றதாக அவர் பதிலளித்துள்ளார். ஹக்கீம் மாத்திரம் தான் புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்ற ஒருவராவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஒருவரை ஒருவர் கை நீட்டுவதினால் எந்ததொரு பயனுமில்லை. இந்த தாக்குதல் இடம்பெற்றமைக்கான காரணம் தொடர்பாக முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தாக்குதல் இடம்பெற்றமைக்கு முக்கிய காரணம், கடந்த அரசாங்கத்தில் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்காமையே ஆகும். இதனை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். கிரியெல்ல, சம்பிக்க, சஜித், ரஞ்சித் பண்டார, கயந்த, பொன்சேக்கா உள்ளிட்ட அனைவரும் பாராளுமன்றத்தில் தற்போது அங்கம் வகித்துள்ளார்கள். அனைவரும் கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை.  பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பதவிகளை பெறுவது எவ்வாறு என்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தினீர்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/11/2021 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை