சீன கொவிட் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்

முதற்கட்டமாக ஆறு இலட்சம் தடுப்பு மருந்து

சீனாவில் தயாரிக்கப்படும் சைனோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகள் நாளை புதன்கிழமை (31) நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அதற்கமைய முதற்கட்டமாக 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சைனோஃபார்ம் தடுப்பூசிகளுக்கு இலங்கையின் அவசர பயன்பாட்டுக்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை அனுமதியளித்துள்ளதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்படுகின்ற ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

முதற்கட்டமாக 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விரைவில் இந்த தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

Tue, 03/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை