வனவள திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் எல்லைப்படுத்தப்பட்டிருக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்டத்தின் நெடுந்தீவு, சுண்டிக்குளம், நாவற்காடு மற்றும் சரசாலை பகுதிகளில் இத் திணைக்களங்களால் தனியார் மற்றும் அரச காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்விற்கு பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களின் போது சுட்டிக்காட்டப்பட்டது.  அதனடிப்படையில் இவ் விடயம் தொடர்பாக துறைசார் அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவின் கவனத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் கொண்டு சென்றதுடன், கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் காணி பிரச்சினை உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச செயலர்களுடன் கொழும்பில் அமைச்சரின் தலைமையில் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் அமைச்சில் இருந்து உத்தியோகத்தர்கள் யாழ்.வந்து பிரதேச செயலர்களுடன் இணைந்து கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பின்னர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி விசேட நிருபர்

Thu, 03/11/2021 - 19:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை