சுயஸ் கால்வாயில் மீண்டும் போக்குவரத்துகள் ஆரம்பம்

சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 100 கப்பல்கள் கடல்வழிப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளன.

அங்கு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கிக் கொண்ட கப்பல்களில், முதலில் ஹொங்கொங்கைச் சேர்ந்த கப்பல் ஒன்று விடுவிக்கப்பட்டது.

சுயஸ் கால்வாயைத் தாண்டிச் செல்லும் கப்பல்கள் பொதுவாக எகிப்துக்குக் கால்வாயைப் பயன்படுத்திக்கொள்வதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

எவர் கிவன் கொள்கலன் கப்பல் தரைதட்டியதால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட, கப்பல் உரிமையாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு, 12 மில்லியன் டொலருக்கும் 15 மில்லியன் டொலருக்கும் இடைப்பட்ட தொகையை இழப்பீடாகக் கோரவிருப்பதாக எகிப்து கூறியுள்ளது.

எவர் கிவன் கப்பல் மீண்டும் அதன் கடல் பயணத்தைத் தொடர முடியுமா என்பதை உறுதிசெய்ய சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கப்பல் உரிமையாளர் கூறினார். தற்போது அந்தக் கப்பல் சுயஸ் கால்வாயில் எங்கும் நகராமல், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் நிற்பதைத் செய்மதிப் படங்கள் காட்டுகின்றன.

கால்வாயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக, மூன்றரை நாட்கள் வரை ஆகும் என்று கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற 422 கப்பல்களும் 3 அல்லது 4 நாட்களில் சுயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சுயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Wed, 03/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை