Header Ads

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசுல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

68 வயதான இம்ரான் கான் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கான் கொரோனா தொற்றுக்கு எதிராக முதலாவது தடுப்பூசியை பெற்று இரண்டு நாட்களிலேயே நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

சிறிய இருமல் ஏற்பட்டு அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் தற்போது சிறிய காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அவரது மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 623,135 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 13,799 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்–19 தொற்றுக்குக் காரணமான வைரஸுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த தடுப்பூசி உதவுகின்றபோதும் பொதுவாக அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு ஒருசில வாரங்களிலேயே எதிர்ப்புச் சக்தி உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 03/22/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.