கினியா பாரிய வெடிப்பு: உயிரிழப்பு 98 ஆக உயர்வு

எக்குவடோரியல் கினியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 615 பேர் காயமடைந்திருப்பதோடு 299 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் பிரதான நகரான பாடாவில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றது. அந்த முகாமிற்கு அருகில் இருக்கும் வயல் நிலத்தில் வைக்கப்பட்ட தீ டைனமைட் கிடங்கில் பற்றிக்கொண்டதை அடுத்தே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடிபாடுகளில் தன்னார்வலர்கள் தேடுதலில் ஈடுபட்டபோதும் சடலங்களை மீட்டுள்ளனர். இதன்போது மூன்று சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட நகரில் இருக்கும் அனைத்து கட்டடங்களும் இந்த வெடிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

வீடுகள் இரவு முழுவதும் பற்றியெரிந்து சிறு சிறு வெடிப்புகளும் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wed, 03/10/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை