முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 9இல் நிறைவு

- கல்வியமைச்சு விசேட சுற்றறிக்கை

நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 19ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதற்கிணங்க எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

அதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட உள்ளன.அதற்கான விசேட சுற்றுநிருபம் கல்வியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 29ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னா யத்தங்களை மேற்கொள்வதற்காக மூன்று தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பரீட்சைகளை நடத்துதல்

விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல் ஆகிய பொருத்தமற்றது என்பதையும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  அதேவேளை சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பில் மேற்படி சுற்று நிருபத்தில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க 15 மாணவர்களுக்கு உட்பட்ட வகுப்புகளை தினமும் நடத்துவது மற்றும் 16 லிருந்து 30 மாணவர்கள் உள்ளடங்கும் வகுப்புகளை இரண்டாக பிரித்து ஒரு கிழமைக்கு அரைவாசிப்பேர் மறு கிழமைக்கு அரைவாசிப் பேர் என கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்புகளை மூன்றாகப் பிரித்து பொருத்தமான விதத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Fri, 03/26/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை