சவூதி அரசினால் இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.  

இந்த பேரீத்தம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இதன்போது இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரக பிரதித் தூதுவர் றியாப் அல் ஷரீப், பிரதமரும் புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த பேரீத்தம் பழங்களைக் கையளித்தார்.   அவற்றை பிரதமர், அனைத்து முஸ்லிம்களுக்கும் விநியோகிக்குமாறு   முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபிடம் கையளித்தார்.  

இப் பேரீத்தம் பழங்கள் மிகவிரைவில் நாடு பூராகவும் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக  பணிப்பாளர்  அஷ்ரப் இதன்போது தெரிவித்தார்.

அஷ்ரப் ஏ சமட் 

Mon, 03/29/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை